பிரதமர் மோடியால் எழுச்சி பெற்ற தலைமுறை
இந்திய இளைஞர்களை நிர்வகிக்கப்பட வேண்டிய பிரச்னையாகவோ, வாக்கு வங்கியாகவோ பிரதமர் நரேந்திர மோடி ஒருபோதும் கருதியதில்லை.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு, ஓர் இளம் இந்தியப் பெண், தான் ஒரு ராக்கெட்டை உருவாக்க விரும்புவதாகக் கூறியிருந்தால், அதைச் சற்று கற்பனை செய்து பாருங்கள். இஸ்ரோவில் பணியாற்ற வேண்டும் என்பதல்ல; தானே ஒரு ராக்கெட்டை உருவாக்க வேண்டும் என்பதே அவரது கனவு. அப்போது, அந்த அறையே அமைதியாகியிருக்கும். மேலும், அவரைப் போன்ற ஒருவரால் இதைச் சாதிக்க முடியாது என்று அக்கறையுடன் ஒருவர் எடுத்துரைத்திருப்பார்.
விண்வெளித் துறை என்பது அரசுக்கே உரியது, இது போன்ற வானுயர்ந்த கனவுகள் பிற நாடுகளுக்கே உரியவை என்ற மனப்பான்மையும் நிலவியது. ஓர் இந்திய தனியார் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ராக்கெட் கடந்த ஜூலை 18-ஆம் தேதி விண்வெளியின் சுற்றுப்பாதையை அடைந்தது. பாதுகாப்பான பணியைத் துறந்து, சாத்தியமற்றதாகக் கருதப்பட்ட அந்தக் கனவை நனவாக்க முனைந்த இளம் பொறியாளர்களால் நிறுவப்பட்ட ஸ்கைரூட் நிறுவனம் இந்த ராக்கெட்டை உருவாக்கியது. இதன்மூலம், தனியார் நிறுவனங்களும் விண்வெளியை அடையக்கூடிய திறன் பெற்றுள்ள உலகின் மூன்று நாடுகளின் வரிசையில் அமெரிக்கா, சீனாவுடன் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது.


