கோவை கோட்டத்துக்கு புதிய மேலாண் இயக்குனர்
கோவை: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக கோவை கோட்ட மேலாண் இயக்குனராக இருந்த முகமது நாசர் ஓய்வு பெற்றார்.
இதையடுத்து, மதுரை கோட்ட பொது மேலாளராக(தொழில்நுட்பம்) இருந்த கோபாலகிருஷ்ணன் கோவை கோட்ட மேலாண் இயக்குனராக பதவி உயர்வு பெற்றுள்ளார். நேற்று பதவி ஏற்றுக்கொண்ட அவரை போக்குவரத்துக்கழக அதிகாரிகள், பணியாளர்கள் வாழ்த்தினர்.



