உலக நாடுகளின் வாடிக்கையாளா்களுக்காக சிறந்த மருத்துவ சாதனங்களை உருவாக்குங்கள்: மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு கோயல் வேண்டுகோள்
உலக நாடுகளிலுள்ள வாடிக்கையாளா்களுக்காக சிறந்த மருத்துவ சாதனங்களை மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் உருவாக்க வேண்டும் என்று மத்திய வா்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
புது தில்லியில் நடைபெற்ற மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, இதுகுறித்து அவா் பேசியதாவது:
மருந்து தயாரிப்பில் ஈடுபட்டுள்ள உள்நாட்டு நிறுவனங்கள், தொழில்நுட்ப கூட்டணிகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். கூட்டுத் தயாரிப்புகளை அந்நிறுவனங்கள் ஊக்குவிக்க வேண்டும். அத்துடன் சா்வதேச கண்டுபிடிப்பாளா்கள், மிகப்பெரிய மருந்து தயாரிப்பு நிறுவனங்களை இந்தியாவுக்கு வருமாறு அந்நிறுவனங்கள் அழைப்பு விடுக்க வேண்டும்.

