முதலீட்டை எளிதாக்க புதிய சீர்திருத்தங்கள் - அமைச்சர் கீர்த்தனா
தமிழகத்தில் முதலீட்டை எளிதாக்க புதிய சீர்திருத்தங்களை த.வெ.க. அரசு மேற்கொண்டு வருவதாக அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், நிறுவனங்கள் முதலீடு செய்வதை எளிதாக்க முதலீட்டு வசதி அமைப்பை வலுப்படுத்தி வருவதாக குறிப்பிட்டார்.
கங்கைகொண்டான் மற்றும் தூத்துக்குடியில் நிறுவனங்கள் பயன்படுத்த தயாராக இருக்கும் வகையில் தொழில்துறை வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய கீர்த்தனா,மனைகள் மற்றும் 3D காட்சிப்படுத்தல் உள்ளிட்ட வசதிகளுடன் தொழில்துறை நில ஒதுக்கீட்டிற்கான டிஜிட்டல் தளம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.


