ஒடிசாவில் சோகம்; கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியின்போது 3 பேர் பலி
கோரபுட்ஒடிசாவில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியின்போது விஷவாயு தாக்கி 3 பேர் பலியாகி உள்ளனர்.ஒடிசாவின் ராயகடா மாவட்டத்தில் பத்மாப்பூர் காவல் நிலையத்தி
ஒடிசாவில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியின்போது விஷவாயு தாக்கி 3 பேர் பலியாகி உள்ளனர்.
ஒடிசாவின் ராயகடா மாவட்டத்தில் பத்மாப்பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட தர்பகுடா பகுதியில், கழிவுநீர் வெளியேறும் தொட்டியை சுத்தம் செய்யும் பணிக்கு சென்ற 3 பேர் அடுத்தடுத்து விஷவாயு தாக்கி உயிரிழந்த சோகம் ஏற்பட்டு உள்ளது.
அவர்கள் ஒருவர் பின் ஒருவராக உள்ளே சென்றுள்ளனர். இதில், போதிய பிராண வாயு இல்லாமலோ அல்லது விஷவாயு தாக்குதலாலோ அவர்கள் சுய நினைவற்று போயுள்ளனர்.
