”கல்விக்கான தடைகளை நீக்கி மாணவர்களுக்கு உதவிடுவது அவசியம், அவசரம்” - கி.வீரமணி
மலேசியாவில் மருத்துவ ஆய்வுப் படிப்பு மேற்கொண்டுவரும் மாணவர் பாரதிதாசனுக்கு உடனடியாக உதவித்தொகை அனுப்பிடுக! இங்கிலாந்தில் படிக்க விண்ணப்பித்து தமிழ்நாடு அரசின் உதவித்தொகைக்கு தேர்வாகியுள்ள 316 மாணவர்களுக்கு விசா கிடைக்க ஒன்றிய அரசு மூலம் அந்நாட்டு தூதரை வலியுறுத்துக!
தமிழ்நாடு அரசின் டாக்டர் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித் தொகைத் திட்டத்தின் கீழ் நிதி பெற்று, மலேசிய தேசியப் பல்கலைக்கழகத்தில் மருத்துவத் துறையில், திசுப் பொறியியல் மற்றும் மீள் உருவாக்க மருத்துவத் துறையில், முனைவர் பட்ட ஆய்வு மாணவராக இரண்டாம் ஆண்டு படித்து வரும் மதுரை உசிலம்பட்டியைச் சேர்ந்த மாணவர் பாரதிதாசன், அண்மையில் தமது நடப்பு ஆண்டுக்கான கல்வி உதவித் தொகை வழங்கப்படவில்லை என்று சமூக ஊடகங்கள் வழியாகத் தெரிவித்து இருந்தார்.
ரூ.21 லட்சம் அளவிலான தொகையை இன்னமும் தமிழ்நாடு அரசு அவருக்கு அனுப்பவில்லை. கடந்த ஆண்டு செலவுகளுக்குரிய கணக்குகளையும், அவற்றுக்கான ரசீதுகளையும் கடந்த ஜூன் 8 அன்றே சமர்ப்பித்துவிட்டார். அவரது ஆராய்ச்சிப் படிப்பு குறித்த பல்கலைக்கழகத்தின் தரநிலை அறிக்கையும் அங்கிருந்து பல்கலைக்கழகத்தால் அனுப்பப்பட்டுவிட்டது. இந்நிலையில், இவ்வாண்டுக்கான ரூ.36 லட்சம் மதிப்புள்ள உதவித் தொகையில், ரூ.5 லட்சத்துக்கான கல்வித் தொகையும், ரூ. 6 லட்சத்துக்கான வாழ்வாதாரச் செலவுகளுக்கான தொகையும் வழங்கப்பட்டுவிட்ட நிலையில், இவ்வாண்டின் ஆய்வைத் தொடர்வதற்காக வழங்கப்பட வேண்டிய ரூ.21 லட்சம் அளவிலான தொகையை இன்னமும் தமிழ்நாடு அரசு அவருக்கு அனுப்பவில்லை.

/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)


