மதநல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டு; நாகூர் ஆண்டவர் தர்காவில் இந்து மத ஜோடிக்கு திருமணம்
நாகூர்நாகூர் ஆண்டவர் தர்காவில் மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக, இந்து மத ஜோடிக்கு திருமணம் நடந்தது.நாகை மாவட்டம் நாகூரில் உலக பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்க
நாகூர் ஆண்டவர் தர்காவில் மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக, இந்து மத ஜோடிக்கு திருமணம் நடந்தது.
நாகை மாவட்டம் நாகூரில் உலக பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்காவிற்கு நாள்தோறும் உள்ளூர், வெளியூர், வெளிமாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக திகழும் நாகூர் தர்காவில் இஸ்லாமியர்கள் மட்டுமல்லாது அனைத்து மதத்தினரும் வழிபட்டு செல்வதை பார்க்க முடியும்.
இந்த நிலையில், நாகூர் தர்காவில் மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக இந்து மணமக்களுக்கு நேற்று திருமணம் நடந்தது. முன்னதாக மணமக்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், மணமக்களை நாகூர் தர்காவிற்கு காலையிலேயே அழைத்து வந்தனர்.


