பிரிக்ஸ் வர்த்தக மன்ற கூட்டத்தில் சாதனை; 5 மணி நேரத்தில் 600 வர்த்தக சந்திப்புகள்
புதுடெல்லி, பிரிக்ஸ் உச்சி மாநாட்டை முன்னிட்டு, வர்த்தக மன்ற கூட்டத்தில் 5 மணி நேரத்தில் 600-க்கும் மேற்பட்ட வர்த்தக சந்திப்புகள் நடந்துள்ளன. வர்த்தக மன்றம்டெல்
பிரிக்ஸ் உச்சி மாநாட்டை முன்னிட்டு, வர்த்தக மன்ற கூட்டத்தில் 5 மணி நேரத்தில் 600-க்கும் மேற்பட்ட வர்த்தக சந்திப்புகள் நடந்துள்ளன.
டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் பிரிக்ஸ் உச்சி மாநாடு இன்றும் (சனிக்கிழமை), நாளையும் நடைபெறுகிறது. இந்த மாநாட்டை முன்னிட்டு வர்த்தக மன்ற கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த வர்த்தக மன்றம், பிரிக்ஸ் அமைப்பின் முதன்மை தனியார்துறை தளம் ஆகும். இது ஆண்டுதோறும் உச்சி மாநாடு நடைபெறும் நாட்டில், மாநாடு தொடங்குவதற்கு முந்தைய நாள் நடைபெறும். அதன்படி நேற்று நடைபெற்ற இந்த கூட்டத்தில் ரஷிய கூட்ட மைப்பின் பொருளாதார மேம்பாட்டு மந்திரி மாக்சிம் ரெஷெட்னிகோவ், மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர், வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பியூஸ் கோயல், இணை மந்திரி ஜிதின் பிரசாதா மற்றும் வர்த்தகத்துறை செயலாளர் ராஜேஷ் அகர்வால் ஆகியோர் தொடக்க அமர்வில் உரையாற்றினார்கள்.
வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பேசுகையில், "பிரிக்ஸ் அமைப்பானது, பன்முகத் தன்மை வாய்ந்த, அதே சமயம் ஒன்றுக்கொன்று துணைபுரியும் வளங்கள், சந்தைகள், திறன் கள் மற்றும் அனுபவங்களைக் கொண்ட பொருளாதாரங்களை ஒன்றிணைக்கிறது. 20 ஆண்டு களை இந்த அமைப்பு நிறைவு செய்வதால், இந்த ஆண்டு பிரிக்ஸ் அமைப்புக்கு ஒரு மைல் கல்லாக அமைகிறது. இந்தியாவின் தலைமைப் பொறுப்பு. புத்தாக்கம் மற்றும் தொழில்மு னைவோர் சூழல் அமைப்பை வலுப்படுத்த முயன்றுள்ளது" என்று கூறினார்.


