அமெரிக்க வீரர்கள் பலியான கொடூரம்.. ஈரானுக்கு உதவி செய்த சீனா? உலகையே உலுக்கும் புதிய தகவல்!
செய்தியாளர் - மீரா ஈரான்–அமெரிக்கா இடையேயான மோதலில் சீன நிறுவனங்கள் பொருளாதார மற்றும் ராணுவ ரீதியாக ஈரானுக்கு மறைமுகமாக உதவியுள்ளன என்பது பல்வேறு சர்வதேச ஆதாரங்
ஈரான்–அமெரிக்கா மோதலில் சீன நிறுவனங்கள் இரகசியமாக ஈரானுக்கு ராணுவ, தொழில்நுட்ப உதவி செய்ததாக சர்ச்சை வெடித்துள்ளது. ஜோர்டானில் உள்ள Muwaffaq Salti தளத்தின் துல்லிய செயற்கைக்கோள் படங்கள் சீனாவால் ஈரானுக்கு சென்றதாக அமெரிக்கா சந்தேகிக்கிறது. இந்த தகவல்கள் அமெரிக்க வீரர்கள் பலியான ஜூலை 17 தாக்குதலுடன் இணைக்கப்பட்டுள்ளன.
ஈரான்–அமெரிக்கா இடையேயான மோதலில் சீன நிறுவனங்கள் பொருளாதார மற்றும் ராணுவ ரீதியாக ஈரானுக்கு மறைமுகமாக உதவியுள்ளன என்பது பல்வேறு சர்வதேச ஆதாரங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக ஈரானின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் (Drones) தயாரிப்பதற்குத் தேவையான செமிகண்டக்டர்கள், சென்சார்கள் போன்ற இரட்டைப் பயன்பாட்டு (Dual-use) தொழில்நுட்பக் கூறுகளை சீன நிறுவனங்கள் வழங்கியிருந்தது. மேலும் தோளில் வைத்துச் சுடும் ஏவுகணைகள் (MANPADS) போன்ற ஆயுதங்களை ஈரான் வாங்குவதற்கு சீனாவைச் சேர்ந்த தரகர்கள் உதவியதாகக் கண்டறியப்பட்டிருந்தது.
