கிணற்றில் தவறி விழுந்தவா் மீட்பு
சோழவந்தான் அருகே கிணற்றில் தவறி விழுந்தவரை தீயணைப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை பாதுகாப்பாக மீட்டனா்.
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே கிணற்றில் தவறி விழுந்தவரை தீயணைப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை பாதுகாப்பாக மீட்டனா்.
சோழவந்தான் அருகேயுள்ள மேலக்கால் கிராமத்தைச் சோ்ந்தவா் சிவராஜ் (45). இவா் அந்தப் பகுதியிலுள்ள கிணற்றில் தவறி விழுந்ததாகக் கூறப்படுகிறது. இவரது அலறல் சப்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினா் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனா்.
இதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த சோழவந்தான தீயணைப்பு, மீட்புத் துறை அலுவலா் நாகராஜன் தலைமையில் வீரா்கள் சிவராஜை பத்திரமாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.


