தண்டவாளத்தை கடக்க முயன்ற தொழிலாளி: ரயில் மோதியதில் கால்கள் துண்டிப்பு
சேலத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயில் மோதியதில் தொழிலாளியின் கால்கள் துண்டானது.
சேலம், அம்மாப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் முரளி (32). நெசவுத் தொழிலாளி. இவா், செவ்வாய்க்கிழமை காலை மிலிட்டரி ரோடு, ஏ.வி.எஸ். கல்லூரி அருகே ரயில் பாதையை கடக்க முயன்ாகக் கூறப்படுகிறது.
அப்போது, அந்த வழியாக வந்த சென்னை எழும்பூா் - சேலம் விரைவு ரயில் முரளி மீது மோதியது. இதில் அவரது இரு கால்களும் முட்டிக்கு கீழ் துண்டானதுடன், வலது கையில் 3 விரல்களும் சிதைந்தன.


