“ரணபலி” படப்பிடிப்பை நிறைவுசெய்த நடிகை ராஷ்மிகா
‘ரணபலி’ திரைப்படத்தின் படப்பிடிப்பை நடிகை ராஷ்மிகா நிறைவுசெய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா. இவர்கள் ஏற்கனவே ‘கீதா கோவிந்தம்’, ‘டியர் காம்ரேட்’ ஆகிய திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இந்த நிலையில், மூன்றாவது முறையாக இருவரும் புதிய திரைப்படத்தில் இணைந்துள்ளனர்.
விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி வரும் இப்படத்திற்கு ‘ரணபாலி’ என பெயரிடப்பட்டுள்ளது. ‘மம்மி’ உள்ளிட்ட படங்களில் நடித்த அர்னால்ட் வோஸ்லூ இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் டி-சீரிஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு அஜய் - அதுல் இசையமைக்கின்றனர்.

