'மெதுவா படிக்கிறது தப்பா?' - குழந்தையின் தாய் புகார்; மறுக்கும் ஆசிரியை; மௌனத்தில் பள்ளி நிர்வாகம்
"அந்த ஆசிரியருக்கு எனது மகள் இன்ஸ்டாகிராமில் காணொளிகள் போடுவது பிடிக்கவில்லை. அதனால்தான் இவ்வாறு செய்கிறார்" - குழந்தையின் தாய்.
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் வட்டத்தில் உள்ள இடைக்கல் என்ற கிராமத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஒரு குழந்தை மிகவும் பொறுமையாகப் படிப்பதால் அந்தக் குழந்தையின் படிப்பை நிறுத்த ஒரு பள்ளி நிர்வாகம் முயல்கிறது என்று ஒரு காணொளி வெளியானது.
அந்தக் காணொளி பதிவிட்ட குழந்தையின் தாயாரிடம் விசாரித்த போது, "எனக்கு இரண்டு மகள்கள், முதல் மகள் மூன்றாவது வகுப்பும் இரண்டாம் மகள் ஒன்றாம் வகுப்பும் படிக்கிறார்கள். போன புதன்கிழமை முதல் மகளுக்கு பள்ளியில் தேர்வு வைத்துள்ளனர்.



