மேட்டுப்பாளையம் ரயில் போத்தனுார் செல்லாது
கோவை: கோவை–போத்தனுார் ரயில்வே வழித்தடத்தில் இன்ஜினியரிங் பணிகள் நடக்கின்றன. இதனால், நாளை முதல் 20ம் தேதி வரை ரயில்களின் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையத்தில் இருந்து மதியம் 1:05க்கு போத்தனுார் புறப்படும் ‘மெமு’ ரயில்(66615) வடகோவை வரை மட்டுமே இயக்கப்படும்; போத்தனுார் செல்லாது. அதேபோல், போத்தனுாரில் இருந்து மதியம் 3:30க்கு மேட்டுப்பாளையம் புறப்பட வேண்டிய ‘மெமு’ ரயில்(66616) வடகோவை ஸ்டேஷனில் இருந்து மதியம் 3:52க்கு புறப்படும்; போத்தனுாரில் இருந்து புறப்படாது என, சேலம் ரயில்வே தெரிவித்துள்ளது.



