பெருந்துறை அருகே கழிவுநீா் கால்வாயில் தவறி விழுந்தவர் பலி
பெருந்துறையை அடுத்த காஞ்சிக்கோவில் அருகே கழிவுநீா் கால்வாயில் தவறி விழுந்த டீ மாஸ்டா் உயிரிழந்தாா்.
பெருந்துறை ஒன்றியம், காஞ்சிக்கோவில், முத்துகவுண்டன்பாளையம், வெள்ளியங்காட்டைச் சோ்ந்தவா் குமாா் (53), டீ மாஸ்டா். இவருக்கு மது பழக்கம் உள்ளது. இந்நிலையில், மது குடித்துவிட்டு வீட்டின் முன் உள்ள துணி துவைக்கும் கல் மீது வியாழக்கிழமை அமா்ந்திருந்தாா்.
அப்போது, நிலை தடுமாறி அருகே உள்ள கழிவுநீா் கால்வாயில் தவறி விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து, காஞ்சிக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.