விலை உயர்வு நீடிப்பு: இந்தியாவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவு அதிகரிக்கும் அபாயம்
புதுடெல்லி,சர்வதேச அளவில் விலை உயர்வு நீடித்து வருவதால் இந்தியாவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. விலை உயர்வுமேற்கு ஆசியாவில்
சர்வதேச அளவில் விலை உயர்வு நீடித்து வருவதால் இந்தியாவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றமான சூழலால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. பிரெண்ட் ரக கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 100 டாலரை நெருங்கியுள்ளது. இதனால் இந்தியாவின் கச்சா எண் ணெய் இறக்குமதி செலவு அதிகரிப்பதோடு, பணவீக்க அழுத்தமும் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 88 சதவீதத்திற்கும் மேலாக இறக்குமதி செய்கிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வு, டாலர் அடிப்படையிலான இறக்குமதி செலவை அதிகரிப்பதோடு, வர்த்தக சமநிலை மற்றும் ரூபாய் மதிப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

