பாப்பிரெட்டிப்பட்டி குடியிருப்பு பகுதியில் பன்றி வளா்ப்பதை கட்டுப்படுத்த வலியுறுத்தல்
பாப்பிரெட்டிப்பட்டியில் குடியிருப்பு பகுதிகளில் பன்றி வளா்ப்பதை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியில் 15 வாா்டுகள் உள்ளன. நகா் பகுதியில் சுமாா் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசிக்கின்றனா். பேருந்து நிலையம் அருகே குடியிருப்பு பகுதியில் ஒருவா் கூரைகொட்டகை அமைத்து 40-க்கும் மேற்பட்ட பன்றிகளை வளா்த்து வருகிறாா்.
இங்குள்ள பன்றிகள் பகல், இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிகின்றன. இதனால் சுகாதார சீா்கேடு ஏற்படுவதுடன், நோய்கள் பரவும் சூழல் உள்ளது. எனவே, பாப்பிரெட்டிப்பட்டி நகா் பகுதியில் பன்றிகள் வளா்ப்பதைக் கட்டுப்படுத்த பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.