அழகப்பா பல்கலையில் செல்பி ஸ்டாண்ட்
காரைக்குடி:காரைக்குடி அழகப்பா பல்கலையில் போதை ஒழிப்பிற்கு எதிரான வாசகங்கள் மற்றும் செல்பி ஸ்டாண்ட் அமைக்கப்பட்டுள்ளது.
காரைக்குடி அழகப்பா பல்கலையில் சமூக விழிப்புணர்வு தொடர்பான கருத்துக்களை பரப்பவும், டிஜிட்டல் ஊடகங்கள் வாயிலாக மாணவர்களின் முழு பங்கேற்பை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் பல்கலை வளாகத்தில் ஏழு இடங்களில் போதை ஒழிப்பிற்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் செல்பி எடுப்பதற்கு போதை ஒழிப்பு எதிரான வாசகங்கள் அச்சடிக்கப்பட்ட செல்பி ஸ்டாண்ட் வைக்கப்பட்டுள்ளன.
நிகழ்ச்சியில் துணைவேந்தர் ஜெயகாந்தன் பேசினார். நிகழ்வில் பல்கலை ஆட்சி குழு உறுப்பினர்கள் வேதி ராஜன், பாலமுருகன், வசீகரன் பதிவாளர் செந்தில் ராஜன் தேர்வாணையர் ஜோதிபாசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


