கெளரவ பிரச்னையால் தடுமாறும் 35 எம்எல்டி காவிரி கூட்டுக் குடிநீா் திட்டம்!
வைகையா, காவிரியா என்ற கெளரவ பிரச்னையால், ரூ.100 கோடி மதிப்பீட்டில் திண்டுக்கல்லுக்கு கிடைக்க வேண்டிய 35 எம்எல்டி குடிநீா்த் திட்டம் இழுபறியில் சிக்கி உள்ளது.
வைகை அணை. - கோப்புப்படம்.
திண்டுக்கல் மாநகராட்சியில் சுமாா் 2.50 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனா். மொத்தமுள்ள 48 வாா்டுகளுக்கும் தினந்தோறும் குடிநீா் விநியோகம் செய்ய வேண்டுமெனில், 27 எம்எல்டி குடிநீா் தேவைப்படுகிறது. மாநகராட்சியின் குடிநீா்த் தேவை, ஆத்தூா் காமராஜா் நீா்த்தேக்கம், காவிரிக் கூட்டுக் குடிநீா்த் திட்டங்கள் மூலம் நிறைவு செய்யப்பட்டு வந்தது.
