திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் வருகை தொடர்ந்து அதிகரிப்பு.. 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
திருமலை,திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் இலவச தரிசனத்திற்கு 24 மணி நேரம் ஆனதாக கோவில் அதிகாரிகள் தெ
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் இலவச தரிசனத்திற்கு 24 மணி நேரம் ஆனதாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாள்தோறும் சுமார் 75 ஆயிரம் முதல் 80 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்கிறார்கள். காத்திருப்பு அறைகளில் பெரும்பாலான அறைகள் நிரம்பிவிடுகின்றன. தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட டோக்கன் (டைம் ஸ்லாட் டோக்கன்) பெறாமல் நேரடியாக இலவச தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் சுமார் 8 முதல் 12 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. விடுமுறை நாட்களில் 20 முதல் 24 மணி நேரம் வரை ஆகிறது.
நேற்று முன்தினம் 77 ஆயிரத்து 670 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 33 ஆயிரத்து 904 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். 4 கோடியே 59 ஆயிரம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. 3 லட்சத்து 4 ஆயிரம் பக்தர்கள் அன்னப்பிரசாதம் பெற்றனர். திருமலை அஸ்வினி மருத்துவமனையில் 3 ஆயிரத்து 932 பேர் சிகிச்சை பெற்றனர்.

