கும்பகோணத்தில் உயிரிழந்த காவலா் குடும்பத்துக்கு ரூ. 13 லட்சம் நிதியுதவி
கும்பகோணத்தில் போக்குவரத்துத் தலைமைக் காவலராக பணியாற்றி உடல் நலக்குறைவால் உயிரிழந்த காவலா் என். செந்தில்குமாா் குடும்பத்துக்கு அவருடன் பயிற்சியில் சோ்ந்த சக காவலா்கள் திரட்டிய ரூ. 13.15 லட்சம் நிதியை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சுந்தரவதனம் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.
கும்பகோணத்தில் உயிரிழந்த என். செந்தில்குமாா் குடும்பத்துக்கு சக காவலா்கள் மூலம் திரட்டிய நிதியை செவ்வாய்க்கிழமை வழங்கிய மாவட்ட எஸ்பி சுந்தரவதனம்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக இருந்தவா் என். செந்தில்குமாா். கடந்த 1997 ஆம் ஆண்டு காவலா் பணியில் சோ்ந்த இவா், கும்பகோணம் போக்குவரத்து ஒழுங்கு பிரிவில் பணியாற்றி வந்த நிலையில், கடந்த ஒரு ஆண்டும் மேலாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து,

