அப்போலோ மகப்பேறு சிறப்பு நிபுணர் 12ம் தேதி புதுச்சேரியில் ஆலோசனை
புதுச்சேரி: சென்னை அப்போலோ மருத்துவனையின் மகப்பேறு சிறப்பு நிபுணர் வரும் 12ம் தேதி புதுச்சேரி அப்போலோ மருத்துவமனை தகவல் மையத்தில் ஆலோசனை வழங்குகிறார்.
சென்னை அப்போலோ மருத்துவமனையின் மகப்பேறு சிறப்பு நிபுணர் சாருமதி, வரும் 12ம் தேதி புதுச்சேரி, எல்லைப்பிள்ளை சாவடி, என்.டி.மஹால் எதிரில், 100 அடி ரோடு, எண்: 60, இயங்கி வரும் அப்போலோ மருத்துவமனை தகவல் மையத்தில், காலை 10:00 மணி முதல் 1:00 மணி வரை மருத்துவ ஆலோசனை வழங்குகிறார்.
அதில், அடி வயிற்றில் வலி, ரத்த கசிவு, சிறுநீர் பாதையில் நோய்த்தொற்றுகள், கர்ப்பப்பை அண்ட் சினைப்பையில் கட்டிகள், குழந்தையின்மை, ஆபத்து நிறைந்த கர்ப்பம், மகப்பேறு சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்னைகளுக்கும், லாப்ரோஸ்கோபி சிகிச்சைக்கும் தகுந்த மருத்துவ ஆலோசனை பெறலாம்.

