நம் நாட்டில் குற்றம் செய்து தப்பியோடிய 27 குற்றவாளிகள் கைது!: 3 ஆண்டுகளில் சாதித்தது ஹரியானா போலீஸ்
சண்டிகர்: நம் நாட்டில் குற்றங்களை செய்து, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 27 பேரை, மூன்று ஆண்டுகளில் ஹரியானா சிறப்பு அதிரடிப்படை போலீசார் நாடு கடத்தி அழைத்து வந்துள்ளனர். இன்னும் பலரை நாடு கடத்தும் நடவடிக்கைகள் இறுதி கட்டத்தில் உள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
நம் நாட்டில் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு, வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றவர்களை இந்தியாவுக்கு நாடு கடத்தும் நடவடிக்கையை, மூன்று ஆண்டுகளாக ஹரியானா போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்ட சிறப்பு அதிரடிப் படையினர், வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் தேடப்படும் குற்றவாளிகள் மற்றும் அவர்களுக்கு உதவும் வலைப்பின்னல்களை குறிவைத்து தேடும் பணியை தீவிரப்படுத்தினர்.

