பஸ் ஸ்டாண்ட் டீக்கடைக்குள் திடீர் தீ
குன்னூர்: குன்னூர் பஸ் ஸ்டாண்ட்டில் உள்ள டீக்கடைக்குள் திடீர் தீயால் பரபரப்பு ஏற்பட்டது.
குன்னூர் பஸ் ஸ்டாண்டில் பிரபாகர் என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். நேற்று மாலை 4:15 மணியளவில் கடையில் வியாபாரம் மும்முரமாக நடந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக காஸ் சிலிண்டர் ரெகுலேட்டர் பகுதியில் திடீரென தீப்பற்றியது. தீ மளமளவென பரவ தொடங்கியதை கண்டதும், அப்பகுதியில் இருந்த டிரைவர்கள் ஓடி வந்து தீயணைப்பு துறையினரிடம் தெரிவித்தனர். மக்கள் மற்றும் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் அங்கிருந்தவர்கள் தீயை அணைத்தனர். உள்ளே இருந்த காஸ் சிலிண்டர்களை தீயணைப்பு துறையினர் பாதுகாப்பாக வெளியே எடுத்து வந்தனர்.
