அறுவடை செய்யப்படாமல் அழுகும் தர்பூசணி
அறந்தாங்கி: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி, கறம்பக்குடி, அறந்தாங்கி உள்ளிட்ட தாலுகா பகுதிகளில், 300 ஏக்கரில் தர்பூசணி பயிரிடப் பட்டுள்ளது.
இந்த பழங்களை, 60 -- 70 நாட்களுக்குள் அறுவடை செய்து, விற்பனைக்கு அனுப்ப வேண்டும். இவற்றை மொத்த வியாபாரிகள் கொள்முதல் செய்து, தமிழகம் மற்றும் பிற மாநிலங்களுக்கு அனுப்புவர்.
தற்போது, தர்பூசணி வரத்து அதிகம் என்பதாலும், அவ்வப்போது பெய்யும் மழையாலும் விற்பனை மந்தமாக உள்ளது. இதனால், தர்பூசணி பழங்களை கிலோ கணக்கில் கூட வாங்க யாரும் முன்வருவதில்லை.


