பெண் அதிகாரிக்கு மிரட்டல்; வி.சி.க., நிர்வாகி மீது வழக்கு
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமம் பேரூராட்சி செயல் அலுவலர் உஷா கிரேசி, 56, என்பவரிடம், ஆபாசமாக பேசி, மிரட்டல் விடுத்த வி.சி.க., நிர்வாகி முத்துக்குமார், 33, மீது, போலீசார் பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
பேரூராட்சி அலுவலகத்திற்கு நேற்று முன் தினம் வந்த கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட வி.சி.க., மாணவரணி நிர்வாகி முத்துக்குமார், உஷா கிரேசியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
'அஞ்சுகிராமத்தில் ராஜன் என்பவர் நடத்தும் சபையை எப்படி அனுமதித்தீர்கள்? அதை ஏன் இன்னும் தடுக்கவில்லை' எனக்கேட்டு தகராறில் ஈடுபட்டார். மேலும், உஷா கிரேசியிடம் ஆபாசமாக பேசி, மிரட்டல் விடுத்தார். அஞ்சுகிராமம் போலீசார், முத்துக்குமார் மீது, பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

