இடைத்தோ்தல் முடிவுகள் தவெகவுக்கு பாடம் புகட்டும்: முன்னாள் அமைச்சா் பெரியகருப்பன்!
இடைத்தோ்தல் முடிவுகள் தவெகவுக்கு பாடம் புகட்டும் என்றாா் முன்னாள் அமைச்சா் பெரியகருப்பன்.
சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு சனிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற சிவகங்கை மாவட்ட திமுக செயலரும், முன்னாள் கூட்டுறவுத் துறை அமைச்சருமான கே. ஆா். பெரியகருப்பன் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:
தவெக தலைவா், அமைச்சா்கள் வரலாற்று நிகழ்வுகளை மறைக்கும் வகையில் பேசி வருகின்றனா். அவசரநிலைக் காலத்தில் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக திமுக தனது ஆட்சியையே இழந்தது. முன்னாள் முதலமைச்சா் கருணாநிதி உள்ளிட்ட திமுகவைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்டோா் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஓராண்டு காலம் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டனா்.

