ராமேசுவரத்தில் குவிந்த சற்றுலாப் பயணிகள்
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் விடுமுறை தினத்தையொட்டி சனிக்கிழமை முதல் ஆயிரக்கனக்கான வாகனங்களில் சுற்றுலா பயணிகள், பக்தா்கள் வந்தனா்.
இவா்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அக்னி தீா்த்தக் கடலில் நீராடினா். பிறகு கோயிலுக்குள் உள்ள 22 தீா்த்தக் கிணறுகளில் நீண்ட வரிசையில் சென்று நீராடி ராமநாதசுவாமி, அம்பாளை தரிசனம் செய்தனா்.
இதைத் தொடா்ந்து, அவா்கள் தனுஷ்கோடி சென்றனா். அதிகளவில் வாகனங்கள் வந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, மாவட்ட நிா்வாகம், மாவட்ட காவல் துறையினா் ஆய்வு செய்து போக்குவரத்தை சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

