டீ, ஸ்நாக்ஸ் செலவு தொகை: ஆடிட் கேள்வியால் அதிர்ச்சி
கோவை: மாநகராட்சி மாமன்ற கூட்டம் (செப்., 11) நடக்கிறது. கவுன்சிலர்கள் 100 பேர், கமிஷனர் தலைமையில் உதவி கமிஷனர்கள், துறை தலைவர்கள் பங்கேற்பர். ஊடகத்தினர் செய்தி சேகரிக்க வருவர். இவர்கள் தவிர துாய்மை பணியாளர்கள், அலுவலக உதவியாளர்கள், போலீசார் என, 200 பேர் பங்கேற்பர்.
இது போல் மண்டல அளவில் வார்டு கூட்டம், நிலைக்குழு கூட்டங்கள் மாதந்தோறும் நடத்தப்படும். இதில் அதிகாரிகள், அலுவலர்கள் என குறைந்தபட்சம் 50 பேர் பங்கேற்பர்.
இக்கூட்டங்களில் பங்கேற்போருக்கு டீ, ஸ்நாக்ஸ் வழங்கப்படுகிறது. இதற்கான செலவினத் தொகைக்கு நிர்வாக அனுமதி இல்லை என தணிக்கைத்துறை ஆட்சேபனை தெரிவித்துள்ளது.