போதை மாத்திரை கடத்திய இளைஞர் கைது: 200 மாத்திரைகள், டூவீலர் பறிமுதல்
வத்தலக்குண்டு: வத்தலக்குண்டில் வாகன சோதனையின் போது டூவீலரில் போதை மாத்திரைகளை கடத்தி வந்த தேனி ஆண்டிபட்டி ராதாகிருஷ்ணனை 23, போலீசார் கைது செய்தனர்.
பழைய வத்தலகுண்டு பிரிவு அருகே இன்ஸ்பெக்டர் கவுதமன், எஸ். ஐ., முனியாண்டி தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தேனியை நோக்கி டூவீலரில் சென்றவர், போலீசாரை கண்டதும் நிற்காமல் சென்றார். போலீசார் விரட்டிப் பிடித்து சோதனையிட்டனர். அப்போது அந்நபரிடம் 200 போதை மாத்திரைகள் இருப்பதை கண்டறிந்தனர். அவரை கைது செய்த போலீசார், போதை மாத்திரைகள், டூவீலரை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.

