கவனம் பெற்ற பாண்டி மெரினா; மேற்கொள்ளப்பட்ட தூய்மைப் பணிகள்... அகற்றப்பட்ட குப்பைகள்!
பாண்டி மெரினா பகுதியில் தேங்கியிருந்த குப்பைகள் அகற்றப்பட்டு, தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முன்பு குப்பைகள் காணப்பட்ட இடங்கள் தற்போது சுத்தமாகக் காட்சியளிக்கின்றன
புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தவறாமல் செல்லும் இடங்களில் பாண்டி மெரினாவும் ஒன்று. கடற்கரையின் அழகை ரசிக்கவும், மாலை நேரங்களில் குடும்பத்துடன் நேரத்தை செலவிடவும் இங்கு பலரும் வந்து செல்கின்றனர்.
ஆனால், இந்த அழகுக்கு மாறாக, கடற்கரையின் பின்புறப் பகுதியில், பிளாஸ்டிக் பைகள், உணவுக் கழிவுகள் உள்ளிட்ட குப்பைகள் ஆங்காங்கே கிடந்ததால், அந்தப் பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவியது. அதுமட்டுமன்றி, தொடர்ந்து குப்பைகள் தேங்கினால் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக இருந்த நிலையில், குப்பைகள் நீரில் கலக்காமல் இருக்க தடுப்புகள் இருந்தன. இருப்பினும் அதிகப்படியான குப்பைகள் சுற்றுச்சூழலை மாசுப்படுத்தி வந்தன.


