குற்றவாளிகளுக்கு அடைக்கலம்: ஏட்டு சஸ்பெண்ட்
காரைக்குடி: கோவையில் மலேசிய சுற்றுலா பயணிகளை அரிவாளால் வெட்டிய இருவருக்கு அடைக்கலம் கொடுத்த காரைக்குடி போலீஸ் ஏட்டுவை சஸ்பெண்ட் செய்து சிவகங்கை எஸ்.பி., அபிேஷக் குப்தா உத்தரவிட்டார்.
மலேசியாவில் இருந்து ஒரு குழுவினர் தமிழகத்திற்கு சுற்றுலா வந்தனர். அவர்கள் சென்னையில் இருந்து கேரளாவிற்கு வேனில் சென்று விட்டு மீண்டும் கோவை வந்தனர். மதுக்கரை மேம்பாலம் அருகே வரும்போது டூவீலரில் வந்த கும்பல் வேனை மறித்து அதில் இருந்த லோகநாதன் 51, யுகேந்திரன் 21 ஆகிய இருவரை வெட்டிவிட்டு தப்பியது.
கோவை போலீசார் விசாரணையில் தப்பிய சிவகங்கையை சேர்ந்த இருவர் காரைக்குடியில் பதுங்கியிருந்தது தெரிந்தது.



