ஆட்டோ கவிழ்ந்து நால்வர் காயம்
தேனி, செப்.18– அம்மச்சியாபுரத்தை சேர்ந்தவர் உதயகுமார் 41. இவர் தனது ஆட்டோவில் வீட்டில் வைத்து பூஜை செய்த
அம்மச்சியாபுரத்தை சேர்ந்தவர் உதயகுமார் 41.
இவர் தனது ஆட்டோவில் வீட்டில் வைத்து பூஜை செய்த விநாயகர் சிலையை கரைக்க வைகை ஆற்றுப்பாலத்திற்கு கொண்டு சென்றார். அவருடன் அதே பகுதியை சேர்ந்த மதன்பாண்டி 15, சத்தியன் 13, துாத்துக்குடியை சேர்ந்த கனகராஜ் 48 ஆகியோர் சென்றனர். குன்னுார் ரோட்டில் சென்றபோது ஆட்டோ கவிழ்ந்து 4 பேரும் காயமடைந்தனர். கனகராஜ் புகாரில் க.விலக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.