சென்னை சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமத்திடம் அரிய ஓலைச்சுவடிகளை ஒப்படைத்த ஈரோடு விவசாயி
சென்னை, சென்னை சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமத்திடம் அரிய ஓலைச்சுவடிகளை ஈரோடு விவசாயி ஒப்படைத்தார். விவசாயிஈரோடு மாவட்டம் காஞ்சிக்கோவில் அருகே உள்ள பொன்னாண்டான்
சென்னை சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமத்திடம் அரிய ஓலைச்சுவடிகளை ஈரோடு விவசாயி ஒப்படைத்தார்.
ஈரோடு மாவட்டம் காஞ்சிக்கோவில் அருகே உள்ள பொன்னாண்டான்வலசு பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன். விவசாயியான இவருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். இவருடைய முன்னோர்கள் தங்களது வீட்டில் தலைமுறை தலைமுறையாக சில பண்டைய கால ஓலைச்சுவடிகளை பாதுகாப்பாக வைத்து வந்துள்ளனர்.
இந்த ஓலைச்சுவடிகளை ஜெகநாதன் பராமரித்து வந்ததோடு, அதில் இருந்த அரிய மருத்துவக் குறிப்புகள் சிலவற்றையும் அவ்வப்போது படித்து புரிந்து கொண்டுள்ளார். ஒரு கட்டத்தில், இந்த ஓலைச்சுவடிகளில் மனித குலத்திற்கு பயன்படக்கூடிய ஏராளமான ரகசிய மருத்துவ குறிப்புகள் இருப்பதை அவர் கண்டறிந்தார்.

