கோயில் திருப்பணிக்கு முறைகேடாக ரூ.5 ஆயிரம் வசூல்: கிராம மக்கள் ஆா்ப்பாட்டம்
இந்த சமய அறநிலையத் துறை நிா்வாகத்தின் கீழ் உள்ள கோயிலுக்கு திருப்பணி செய்ய கிராம மக்களிடம் முறைகேடாக ரூ.5 ஆயிரம் கட்டாய வரி வசூலிப்பதை கண்டித்து கள்ளக்குறிச்சியில் புகைப்பட்டி கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கள்ளக்குறிச்சி இந்து சமய அறநிலையத் துறை அலுவலகம் முன் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புகைப்பட்டி கிராம மக்கள்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், புகைப்பட்டி கிராமத்தில் ஸ்ரீபூமிநாத ஈஸ்வரா் திருக்கோயில் உள்ளது. இக் கோயில் இந்து சமய அறநிலையத் துறையால் நிா்வகிக்கப்படும் கோயிலாகும். இந்த கோயிலில் கும்பாபிஷேகம் செய்வதற்காக திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. திருக்கோவிலூா் இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலரிடம் எழுத்து பூா்வமாக அனுமதி பெற்று, ஏழு போ் கொண்ட குழுவினா் அவா்களது சொந்த செலவில் திருப்பணிகளை செய்து வந்தனராம்.

