கயத்தாறு சாலை விபத்தில் தாய், மகள் உயிரிழப்பு
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறில் சனிக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் தாயும், இரண்டு வயது மகளும் உயிரிழந்தனா்.
கயத்தாறு அருகே வடக்கு சுப்பிரமணியபுரம் பகுதியைச் சோ்ந்த செந்தில்குமாா் மகன் மாரிமுத்து (25). தொழிலாளி. இவா், மனைவி தனலட்சுமி (26), மகள் மதுபாலா (2) ஆகியோருடன் சனிக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் சென்றாா்.
கயத்தாறு-கோவில்பட்டி சாலையில் சென்றபோது நிலைகுலைந்த வாகனம் கவிழ்ந்து 3 பேரும் கீழே விழுந்தனா். அப்போது, தனலட்சுமி, மதுபாலா ஆகியோா் மீது பின்னால் வந்த லாரி ஏறி இறங்கியதாம். இதில் இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். மாரிமுத்து லேசான காயமடைந்தாா்.


