கஞ்சா பறிமுதல் இளைஞர்கள் கைது
காரைக்குடி: காரைக்குடி புது பஸ் ஸ்டாண்டில் எஸ்.ஜ., வெண்ணிலா தலைமையில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த மேலுாரை சேர்ந்த முகமது அப்துல்லா 26, மதுரை முனிச்சாலை சந்தோஷ் குமார் 24 ஆகியோரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் 2 கிலோ கஞ்சா வைத்திருந்து தெரிய வந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் கைது செய்தனர்.




