அமராவதி பிரதான கால்வாயில் உயிர்த்தண்ணீர் திறக்க கோரிக்கை
உடுமலை: உடுமலை அமராவதி அணையிலிருந்து, புதிய ஆயக்கட்டு பாசனத்திலுள்ள கரும்பு பயிர்களை காப்பாற்ற பிரதான கால்வாயில் உயிர்த்தண்ணீர் திறக்க வேண்டும், என, அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு பயிடுவோர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு பயிரிடுவோர் சங்கம் சார்பில், தலைவர் சண்முவேலு, செயலாளர் ஈஸ்வரன் ஆகியோர் தமிழக முதல்வர் மற்றும் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
உடுமலை, மடத்துக்குளம் பகுதியிலுள்ள அமராவதி அணை பாசன பகுதிகளில், கடும் வறட்சி ஏற்பட்டு, நிலையிலுள்ள கரும்பு, தென்னை உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் காய்ந்து வருகின்றன. அதோடு, நிலத்தடிநீர் பாதிப்பு காரணமாக, கால்நடைகள் மற்றும் பொதுமக்களுக்கும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

