கருவேல மர ஏலத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு
திருப்புவனம்: திருப்புவனம் அருகே பிரமனுார் கண்மாயில் கருவேல மரங்கள் ஏலம் விடுவதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பொதுப் பணித்துறைக்கு சொந்தமான பிரமனுார் கண்மாயின் உட்புறம் உள்ள கருவேல மரங்களை வெட்டி அகற்ற வனத்துறை சார்பில் மதுரையை சேர்ந்தவருக்கு 2023ல் ஏலம் விடப்பட்டது.
2 மாதத்திற்குள் 4 எக்டேர் பரப்பளவில் உள்ள நாட்டு கருவேல மற்றும் சீமை கருவேல மரங்களை வெட்ட அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அதனையும் தாண்டி ஒப்பந்ததாரர் மரங்களை வெட்டியதாக பிரமனூர் மற்றும் வாடி கிராம விவசாயிகள் குற்றம் சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டதுடன் பழையனூர் காவல் நிலையத்திலும் புகார் செய்தனர்.
