நாட்டில் பிறர் புகைத்ததை சுவாசித்து இறந்தோர் 3.25 லட்சம் பேர்!
புதுடில்லி: புகைப்பிடிப்போர் வெளியேற்றும் சிகரெட் புகையை சுவாசித்த காரணத்தால், நோய் பாதிப்புக்கு ஆளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை, 2023ல் 3.25 லட்சம் ஆக அதிகரித்துள்ளதாக, சர்வதேச மருத்துவ இதழான, 'லான்செட்' ஆய்வில் தெரியவந்துள்ளது. இது கடந்த, 1990ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 50 சதவீதம் அதிகம்.
புகைப்பிடிப்பது உடல் நலத்துக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால், புகையிலை பயன்பாட்டை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்களின் விளம்பரங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் புகைப்பிடிக்கும் காட்சிகள் இடம்பெறும்போது, அதன் தீமைகள் குறித்த எச்சரிக்கை வாசகங்களும் இடம்பெறுகின்றன.





/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)
