அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் ஆட்சி இருக்கிறதா? கம்யூனிஸ்ட் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்
சென்னை, அமைச்சர் அருண்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆஸ்பத்திரிகளில் காய்ச்சல் அறிகுறிகளுடன் வ
அமைச்சர் அருண்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆஸ்பத்திரிகளில் காய்ச்சல் அறிகுறிகளுடன் வரும் நபர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சிகிச்சைகள் வழங்கப்படுகிறது. சட்டமன்றத்தில் எதிர்கட்சியினர் கேள்வி கேட்பது அவர்களின் கடமை. நியாயமான கோரிக்கைகளை கேள்வி எழுப்பும் போது அதற்கு முதல்-அமைச்சர் நிச்சயம் பதில் அளிப்பார்.
சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்கும் வகையில் எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். அவர் தனக்கான வாய்ப்பை சரியாக பயன்படுத்தவில்லை. முதல்-அமைச்சர் தன்னுடைய பதிலுறையில் அனைத்து கேள்விகளுக்கும் தெளிவான விளக்கம் அளிப்பார். இவ்வாறு அவர் கூறினார்.




