பிரசன்ன மகா கணபதி கோவில் தேரோட்டம்
பாலக்காடு: பாலக்காடு மாவட்டம், பரளி பிரசன்ன மகா கணபதி கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு திருத்தேரோட்டம் வெகு விமரிசையாக நடந்தது.
விழாவையொட்டி நேற்று காலை, 5:00 மணி முதல் இரவு, 9:30 மணி வரை கணபதி ஹோமம், சதுர்வேத பாராயணம், சதுர்த்தி சிறப்புப் பூஜைகள், ரதாரோஹணம், சீவேலி மற்றும் மகா தீபாராதனை உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகள் நடைபெற்றது.
அலங்கரிக்கப்பட்ட யானைகள் முன்னே செல்ல, நாதஸ்வர இசை மற்றும் செண்டை மேளம் முழங்க திருத்தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்துத் தேர் இழுத்தனர்.