அமெரிக்காவில் பயங்கரம்: 2 தோழிகளை கொலை செய்த கேரள இளம்பெண்
வாஷிங்டன்,அமெரிக்காவில் கேரளாவை சேர்ந்த 2 தோழிகளை கொலை செய்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். கேரளாவை சேர்ந்த தோழிகள்கேரள மாநிலம் திரிச்சூரை சேர்ந்தவர் அஞ்சனா
அமெரிக்காவில் கேரளாவை சேர்ந்த 2 தோழிகளை கொலை செய்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம் திரிச்சூரை சேர்ந்தவர் அஞ்சனா ஹரி (வயது 35). திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் மேரி மேத்யூ (வயது 35). கோட்டயத்தை சேர்ந்தவர் அனிலா பேபி (வயது 32). தோழிகளான 3 பெண்களும் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் குடும்பத்தினருடன் தனித்தனியே வாழ்ந்து வந்தனர்.
அனிலாவும், அஞ்சனாவும் கலிபோர்னியாவின் மில்பிடாஸ் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அருகருகே வசித்து வந்தனர். மேரி மேத்யூ சன் ஜோஷி நகரில் வசித்து வந்தார். தோழிகளான 3 பேரும் கடந்த 26ம் தேதி ஓணம் பண்டிகையை கலிபோர்னியாவில் ஒன்றாக கொண்டாடியுள்ளனர்.


