சிறுமி கொலை வழக்கில் விசாரணை ஒத்திவைப்பு
கோவை: சூலுார் அருகே, 10 வயது சிறுமி, மே 21ல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் நாகப்பட்டினம் கார்த்திக், தஞ்சாவூர் மோகன் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மீது, கோவை முதன்மை போக்சோ கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது. சிறுமி தந்தையிடம் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து எதிர் தரப்பு வக்கீல்கள் குறுக்கு விசாரணை செய்தனர். இந்த வழக்கில் விசாரணை முடிந்ததையடுத்து எதிர்தரப்பினர் இருவரிடம், அரசு தரப்பு சாட்சிகளின் குற்றச்சாட்டு குறித்து கேள்வி கேட்க, விசாரணை வரும் 17ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


