மீன்கள் வரத்து அதிகரிப்பால் விலை சரிவு... தூத்துக்குடியில் குவிந்த மீன் பிரியர்கள்
தூத்துக்குடி, தூத்துக்குடியில் மீன்கள் வரத்து அதிகரிப்பால் விலை குறைந்தது. எனவே பொதுமக்கள் ஆர்வமுடன் மீன்களை வாங்கி சென்றனர்.பெரிய மீன்கள்தூத்துக்குடி திரேஸ்புர
தூத்துக்குடியில் மீன்கள் வரத்து அதிகரிப்பால் விலை குறைந்தது. எனவே பொதுமக்கள் ஆர்வமுடன் மீன்களை வாங்கி சென்றனர்.
தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டு படகு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஏராளமான நாட்டு படகு மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நாட்டுப்படகு மீனவர்கள் கரைக்கு திரும்பினர்.
கரைக்கு திரும்பிய மீனவர்களுக்கு மீன்பாடு நன்றாக இருந்ததால் அவர்கள் பெரிய அளவிலான மீன்களை அதிகம் கொண்டு வந்தனர். இதனால் தூத்துக்குடி திரேஸ்புரம் மீன்பிடி துறைமுகத்தில் நேற்று அதிகளவில் மீன்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்தது.




