உழவர் சந்தைக்கு வந்த ‘5 அடி’ முருங்கைக்காய்... பொதுமக்கள் ஆர்வம்!
கம்பம்,கம்பம் உழவர் சந்தைக்கு சுமார் 5 அடி நீளமுள்ள முருங்கைக்காய்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.கம்பத்தில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு விவசாயிகள்
கம்பம் உழவர் சந்தைக்கு சுமார் 5 அடி நீளமுள்ள முருங்கைக்காய்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.
கம்பத்தில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு விவசாயிகள் இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக காய்கறிகளை விற்பனை செய்து வருகின்றனர். வேளாண் துறை சார்பில் தினசரி விலை நிர்ணயம் செய்யப்படுவதால், வெளிச்சந்தையைவிட குறைந்த விலையில் காய்கறிகள் கிடைக்கின்றன.
இதனால் கம்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மட்டுமின்றி, கேரளம் மாநிலத்தை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளும் உழவர் சந்தைக்கு வந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றனர்.

