அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களால் அவதி
தேனி, செப்.7– தேனி நகரில் பெரியகுளம், மதுரை ரோட்டில் டூவீலர்களில் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை
தேனி நகரில் பெரியகுளம், மதுரை ரோட்டில் டூவீலர்களில் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்துகின்றனர்.
சில தனியார் மற்றும் அரசு பஸ்களில் இவ்வகை ஹாரன்கள் பயன்படுத்தப்படுகின்றனர். இந்த ஹாரன்கள் ஒலிக்கும் போது ரோட்டில் டூவீலர்கள் ஓட்டி செல்லும் முதியோர், பிற வாகன ஓட்டிகள் சிரமம் அடைகின்றனர். சில நேரம் கீழே விழுந்து காயமடைகின்றனர். விதிமீறலில் ஈடுபட்டவர்கள் மீது போக்குவரத்து போலீசார், ஆர்.டி.ஓ., ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

