பாலைய்யாவின் 111-வது படத்தின் டைட்டில் வெளியானது
பாலகிருஷ்ணாவின் 111-வது படத்திற்கு ‘டாடா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இப்படம் டிசம்பர் 24ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
DADAதெலுங்கு திரை உலகில் இளம்கதாநாயகர்களுடன் போட்டி போட்டு நடித்து வெற்றிப் படங்களை கொடுத்து வருபவர் பாலகிருஷ்ணா. சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான ‘அகண்டா-2’ படம் நல்ல வரவேற்பை பெற்றது. அவரது படங்கள் எல்லாம் பிளாக் பஸ்டர் படங்களாக அமைகின்றன.
இவர் மறைந்த நடிகர் என்.டி.ராமராவ் மகனாவார். பாலைய்யாவின் மிரட்டலான ஆக்சன் காட்சிகளுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் தற்போது தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று எம்எல்ஏ ஆக உள்ளார்.



