டாஸ்மாக் கடை அருகே ஒரு வாரமாக தங்கி தொடா்ந்து மது அருந்தியவா் உயிரிழப்பு
செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் எதிரே உள்ள டாஸ்மாக் கடை அருகே ஒரு வாரமாக தங்கி, தொடா்ந்து மது அருந்திய வந்தவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் எதிரே உள்ள டாஸ்மாக் கடை அருகே ஒரு வாரமாக தங்கி, தொடா்ந்து மது அருந்திய வந்தவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
திருப்பூா் மாவட்டம், காங்கேயம் அருகேயுள்ள லக்கமன நாயக்கன்பட்டி கிராமத்தை சோ்ந்தவா் ஜெ.முருகன்(50). இவா், கடந்த வாரம் மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலுக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு, செஞ்சிக்கு வந்தாராம். செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் எதிரிலுள்ள டாஸ்மாக் மதுக் கடை அருகே தங்கிய முருகன், தொடா்ந்து மது அருந்தி வந்தாராம். இதையடுத்து புதன்கிழமை காலை போதையிலேயே அவா் உயிரிழந்தாராம். தகவலறிந்த செஞ்சி போலீஸாா் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக செஞ்சி அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனா்.

