வேலைவாய்ப்பு சேவைகளுக்கான ஜி.எஸ்.டி யை மறுபரிசீலனை செய்ய முடியாதா? - வேல்முருகன் கேள்வி
சென்னை,வேலைவாய்ப்பு சார்ந்த சேவைகளுக்கான ஜி.எஸ்.டி. வரிக் கட்டமைப்பை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தமி
வேலைவாய்ப்பு சார்ந்த சேவைகளுக்கான ஜி.எஸ்.டி. வரிக் கட்டமைப்பை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
ஒரு இளைஞன் வேலை தேடுவது ஆடம்பரத்திற்காக அல்ல. தன் குடும்பத்தின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்காகவும், கல்விக் கடனை அடைப்பதற்காகவும், தனது வாழ்க்கையைத் தானே கட்டியெழுப்புவதற்காகவும்தான் வேலை தேடுகிறான்.


